தமிழகம்

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மருந்து: புதுவை சுகாதாரத்துறை முடிவால் முதியோர் வேதனை

செய்திப்பிரிவு

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மருந்து என்ற சுகாதாரத்துறை முடிவால் முதியோர் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுவையில் கரோனா பரவலை தடுக் கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைத்து சுகாதாரத் துறை தடுப்பூசி செலுத்தி வரு கிறது.

இதுவரை 58 சதவீதத் தினருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட்15-ம் தேதிக்குள் 100 சதவீதம்தடுப்பூசி செலுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

இந்நிலையில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சையை தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையம் ஆகியவற்றில் பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற வருபவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை காட்டினால்தான் மருந்துகள் தரு வோம் என ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஊழியர் களுக்கும், முதியோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

அதிகாரிகளின் உத்தரவுப்படி தடுப்பூசி செலுத்திய சான்றுகளை அளித்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப் படும் என ஊழியர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். இதனால் மருந்து, மாத்தி ரைகள் பெற முடியாமல் முதியோர் வேதனை யடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவத் துறையினரிடம் கேட்டதற்கு, “தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சுபவர்களுக்கு ஆலோசனை வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத் தப்பட்டு வருகிறது. முதியோரிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் நிலவுகிறது. இதனால் அவர்கள் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் இந்த முறையை கையாளுகிறோம்” என்கின்றனர்.

முதியோர் தரப்பில் கூறுகை யில், “அரசு ஊழியர்களே இன் னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட்ட வர்களுக்கு மட்டுமா அரசு ஊதியம் தருகிறது?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

SCROLL FOR NEXT