தமிழகம்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்காத போலீஸாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்காத போலீஸாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரத்தை உடனடியாக அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையர்களும் தனக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இதை இணை ஆணையர்கள், கூடுதல் காவல் ஆணையர்கள் மேற்பார்வை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்க காரணம் என்ன? இதில் காவல் துறையினர் உரிய கவனம்செலுத்தியுள்ளனரா? அல்லது வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளனரா என்று தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வழக்கில் சிக்கி தலைமறைவான ரவுடிகளை கைது செய்யவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்காத போலீஸாருக்கு அது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இதையடுத்து நிலுவை வழக்கு விபரங்களை சேகரித்து வரும் போலீஸார், குற்ற வழக்குகளில் சிக்கி தலைமறைவாக உள்ளவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT