கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று தெரிவித்த டாக் டருக்கு 5 ஆண்டுகள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மருத் துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத் துள்ளது.
பெண் சிசு கொலையை தடுப் பதற்காக கருவில் இருக்கும் குழந் தையின் பாலினத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்து சொல்லக் கூடாது என்ற சட்டம் உள்ளது. சட் டத்தை மீறி செயல்படும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட் டம் நெய்வேலி பெரியகுறிச்சி பகுதியில் உள்ள மகாலட்சுமி நர்ஸிங் ஹோமில் பணியாற்றி வந்த டாக்டர் ராமச்சந்திரன் கர்ப்பிணியை பரிசோதனை செய்து கருவில் இருப்பது பெண் குழந்தை என்று கூறியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்- டிஎம்எஸ்) நடத்திய விசாரணையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை டாக்டர் தெரிவித்தது உண்மை என்று தெரி யவந்தது. இதையடுத்து டிஎம்எஸ் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி ராமச்சந்திரன் டாக்டராக பணி யாற்ற 5 ஆண்டுகள் தடை விதித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது:
கருவின் பாலினத்தை டாக்டர் தெரிவிப்பது சட்டப்படி தவறு. சட்டத்தை மீறிய டாக்டர் ராமச்சந் திரனின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு மருத்துவக் கவுன்சில் பதி வேட்டில் இருந்து அவரது பெயரை நீக்கிவிட்டோம். அவர் 5 ஆண்டு களுக்கு எங்கேயும் டாக்டராக பணியாற்ற முடியாது. மருத்துவக் கவுன்சில் அவரை தீவிரமாக கண்காணிக்கும். இதையும் மீறி அவர் டாக்டராக பணியாற்றினால், அவரது உரிமம் வாழ்நாள் முழுவ தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இது போன்ற நடவடிக்கை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.
மதுரை, தருமபுரி மாவட்டங் களில் பெண் சிசு கொலைகள் குறைந்துவிட்டன. ஆனால் தற் போது தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில்தான் பெண் சிசு கொலைகள் அதிகமாக நடக்கின் றன. கடலூர் மாவட்டத்தில் இன்னும் சில டாக்டர்கள் கருவில் இருக் கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து தெரிவிக்கின் றனர். அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.