தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’என அழைக்கப்பட்ட இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த நிதி நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ்பானு தம்பதியும், 10-க்கும் மேற்பட்டோரும் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலா (33), நிதி நிறுவன பொது மேலாளர் காந்த் (56) உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் தர் என்பவரது பண்ணை வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.கணேஷ்,எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.