தமிழகம்

பேருந்து நிலையங்களில் பராமரிப்பில்லாமல் முடக்கப்பட்டுள்ள பாலூட்டும் மையங்கள்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பேருந்துநிலையங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்மையங்கள் பராமரிப்பில்லாமல் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 2015-ம்ஆண்டில் 352 பேருந்து நிலையங்களில் குடிநீர், இருக்கை,கைகழுவும் வசதிகளுடன் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் அவை கவனிப்பாரின்றி, பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன.

குடிநீர் வசதி, இருக்கை,மின் விளக்கு, மின்விசிறி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது மேலும்பாலூட்டும் மையம் திறக்கப்பட்ட கல்வெட்டுகளும் பலஇடங்களில் மறைக்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்தின் காரணமாகவே இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பெண்கள் அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாதர் சங்கத்தினர் கூறியதாவது:

பெண்களுக்கு வசதிக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும்பேருந்து நிலையங்களில் பாலூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டன. இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,அந்த மையத்தில் கழிப்பிடவசதி உள்ளிட்ட அனைத்துஅடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டன.

ஆனால், தற்போது பெரும்பாலான பாலூட்டும் மையங்கள் பராமரிப்பின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிமாற்றம் காரணமாகவே இவை முடக்கப்பட்டுள்ளன. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். கூடவேதாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் வசதியை ஏற்படுத்த அந்த அறையை முறையாக பராமரிக்க உத்தரவு வழங்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT