ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நேரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், திறமையும், ஆர்வமும் இருந்தும் விளையாட முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
1954-ம் ஆண்டு தொடங் கப்பட்ட மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் இருந்தது. இந்த மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து, ஓடுவதற்கு டிராக் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள் இருந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக மைதானத் தின் 5 ஏக்கர் நிலம் விட்டுக் கொடுக்கப்பட்டது. அதற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி விளையாட்டு மைதானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டப்பட்டது.
இதையடுத்து மைதானத்தின் பரப்பு 5 ஏக்கராக சுருங்கியது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்காக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், பொதுப்பணித் துறையினர் கற்களையும், மண் ணையும் இம்மைதானத்தில் கொட் டினர். அதனால் மருத்துவக் கல் லூரி மாணவர்கள் முற்றிலும் விளையாட முடியாமல் பாதிக்கப் பட்டனர்.
கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். தற்போது மருத் துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் விளையாட்டு மைதானத்தில் கொட்டிய மண், கற்கள் அப்புறப் படுத்தப்பட்டுவிட்டன.
ஆனால் குண்டும், குழியுமாக உள்ள மைதானத்தை சீரமைத்து தரவில்லை. புதிய கோல் போஸ்ட், டிராக், கிரிக்கெட் பிட்ச்சும் அமைத் துத் தரவில்லை.
மேலும், அரசு மருத்துவ மனையில் நடக்கும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக வடமாநிலங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் தங்குவதற்காக விளையாட்டு மைதானத்தில் பொதுப்பணித்துறை யினர் தற்காலிக தங்குமிடங்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை போல் இந்திய வீரர்கள் பதக்கம் பெற முடியவில்லையே என்று மக்கள் ஏங்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்களை இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கும், மண், கற்கள் கொட்டுவதற்கும் பயன்படுத்தி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை அதிகாரிகள் மழுங் கடித்து வருகின்றனர்.
விளையாட்டு கனவுகளுடன் வரும் மாணவர்கள், மைதானங்கள் இல்லாமல் ஒரு கட்டத்தில் விளையாடுவதையே நிறுத்தி விடு கின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கூறு கையில், ‘‘மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு படிப்புடன் உடற் பயிற்சி, விளையாட்டு பயிற்சி முக்கியமானது. அதுதான் அவர் களை புத்துணர்வுடன் வைக்க உதவும்.
ஆனால், அதற்கான வாய்ப்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் இல்லை. விளையாட்டு மைதா னத்தை மீட்க டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.