சென்னையை அடுத்த வண்டலூ ரில் பாமக மாநில மாநாடு இன்று நடக்கிறது.
பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அறி விக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மண்டல வாரியாக மாநாடுகளும் நடத்தப்பட்டன. மேலும், ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற கொள்கை ஆவணத்தை வெளி யிட்டு சென்னை முழுவதும் மக் களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து சென் னையை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி திடலில் பாமக மாநில மாநாடு இன்று நடக்கிறது. ‘ஆட்சி மாற்றத்துக்கான பாமக மாநில மாநாடு’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராம தாஸ் சிறப்புரை ஆற்றுகின்றனர். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பாமக தொண்டர்கள் மாநாட்டுக்கு திரண்டு வருவார்கள் என்றும், மற்ற அரசியல் கட்சிகளின் மாநாடுபோல இல்லாமல், இந்த மாநாடு வித்தியாசமாக இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வேண்டுகோள்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாமக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆவலுடன் எதிர்பார்க் கும் பாமக மாநில மாநாடு சனிக் கிழமை (இன்று) மாலை வண்டலூர் விஜிபி திடலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தமிழக வரலாற்றில் பெரிய மைல்கல்லாக அமையப் போவது உறுதி.
பல லட்சக்கணக் கான தொண்டர்களும், பொதுமக் களும் மாநாட்டுக்கு வரவுள்ளனர். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அமைதியாக ராணுவக் கட்டுப் பாடுடன் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். மற்ற கட்சிகளின் மாநாட்டுக்கு இது முன்னுதாரணமாக அமைய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.