தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி தலைமை இயக்குநராக (புலனாய்வு) சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார்.
சுனில் மாத்தூர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்கள் அணியைச் சேர்ந்தவர். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மேற்குவங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர்பதவி வகித்துள்ளார். தற்போது பதவி உயர்வு பெற்று, வாரணாசியில் இருந்து மாற்றலாகி சென்னை வந்துள்ளார். இந்த தகவலை சென்னை வருமானவரித் துறையின் கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) டி.ரோகிணி தெரிவித்துள்ளார்.