தமிழகம்

வெற்றியே நோக்கமென்று பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

செய்திப்பிரிவு

கண் வலியோடு தான் கட்சிப் பணியாற்றி வருவதை உணர்ந்து, திமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் கட்சிப் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண் டர்களுக்கு நேற்று எழுதிய கடி தத்தில் அவர் கூறியிருப்பதாவது:

1953-ம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் எனது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எனது இடது கண் ணில் ஈட்டி பாய்ந்தது போன்ற வலி ஏற்பட்டது. கண் மருத்து வர் முத்தையா என்னை பரிசோதித்தார். பிறகு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 12 முறை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

1967-ல் மீண்டும் ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு கண் வலி அதிகரித்தது. 1971-ல் அமெரிக் காவின் பால்டிமோரில் உள்ள ஜான்ஹாப்கின்ஸ் மருத்துவ மனையில் டாக்டர் மாமுனி என்ப வர் எனக்கு அறுவை சிகிச்சை செய்தார். அதனால் கண் வலி சற்று குறைந்தாலும் அவ்வப்போது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கண் வலி தொல்லை தந்தாலும் திமுகவுக்கும், தமிழகத்துக்கும் பணியாற்ற வேண்டும் என உள்ளத்தில் எழும் உணர்ச்சியால் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்பதை தொண்டர்கள் உணர வேண்டும். இதற்கிடையில வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

தினமும் குடும்பத்துடன் வந்து கட்சியினர் கொடுத்த தேர்தல் நிதி இதுவரை ரூ. 26 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 936 வந்துள்ளது. இது எனது கண் வலியை மறக்கடிக்கவே செய்கிறது. திமுக வலிவும், பொலிவும் பெற வேண்டும் என்பதற்காகவே கண் வலியையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வருகிறேன் என்பதை உணர வேண்டும்.

ஒரு தொகுதிக்கு பலர் விருப்ப மனு அளித்திருக்கலாம். ஒரு தொகுதிக்கு ஒருவரைத் தான் நிறுத்த முடியும். சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம். அவ்வாறு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிக்கு மனு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து திமுக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். கட்சிக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT