தமிழகம்

மின்னகம் மையத்தின் புகார் எண்; நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் மின்வாரியம்: எளிதில் புகார் அளிக்க வசதி

செய்திப்பிரிவு

மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்கஅண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின் புகார் எண்ணைநுகர்வோர் எளிதில் அறிந்துக் கொள்வதற்காக, அவர்களுடைய மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்கள் மின்தடை, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்களையும், ஒரே இடத்தில் தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் அண்மையில் திறக்கப்பட்டது.

இந்த மையத்தை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ஆனால், இந்த எண் பலருக்குத் தெரிவதில்லை. இதுகுறித்து, நுகர்வோர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, மின்னகம்நுகர்வோர் சேவை மையத்தின் எண்கள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை அனைத்து அலுவலகங்களிலும் ஒட்டுவதுடன், பெயின்ட்டால் எழுதப்பட வேண்டும்.

அத்துடன், 3.20 கோடி மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் புகார் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின் வாரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT