மக்களிடையே மிகு ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்பு ணர்வு குறைவாகவே உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உடற் பயிற்சியுடன் சரியான உணவுமுறையே அவசியம் என்று துணைநிலை ஆளுநர் தமி ழிசை தெரிவித்தார்.
'மிகு ரத்த அழுத்த நோய்க்கான அறிவியல் அணுகுமுறை' என்ற தலைப்பில் இந்திய மிகுரத்த அழுத்த கழகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கம் நேற்று நடை பெற்றது.
இக்கருத்தரங்கில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பங் கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
மிகு ரத்த அழுத்த நோய் உலக அளவில் பெரும் அச் சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. மிகுரத்த அழுத்த நோய் மார டைப்பு, பக்கவாதம், இதயம் மற்றம் சிறுநீரகம் செயலிழப்பு போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. வாழ்வியல் சார்ந்த இந்த நோய் அமை தியாக உயிரைக் கொல்லும் நோயாக உள்ளது. சரியான நேரத்தில் மிகு ரத்த அழுத்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத் தில் போய் முடியும். ஆனால் மக்களிடையே மிகு ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.
அதிக உடல் பருமன், நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றை ரத்த அழுத்த நோயோடு சேர்த்து கவனிக்க வேண்டியது அவசியம். உணவில் அதிக உப்பை எடுத்துக்கொள்வது, குறைவான உடல் உழைப்பு போன்றவை சிறு வயதிலேயே இதய நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. மிகு ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி அவசியம். மது, புகை பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.