புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங் களைச் சேர்ந்த மீனவர் களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கும் திட்டத்தை முதல் வர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீட்புப் பணி யில் ஈடுபட்டபோது முற்றிலுமாக சேதமடைந்த 3 கண்ணாடி நாரி ழையிலான படகுகளுக்கு பதிலாக தலா ரூ.1.50 லட்சம் செலவில் புதிய படகுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 கட்டுமரங் களுக்கு பதிலாக தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் கண்ணாடி நாரிழையிலான கட்டுமரங்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டன. இதற்கு அடையாளமாக ஒரு மீன வருக்கு படகின் பதிவுச் சான்றிதழை யும், ஒருவருக்கு கட்டுமரத்தின் பதிவுச் சான்றிதழையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சில்லரை மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள மீனவ மகளிர் மற்றும் மீனவர்களின் விற்பனை திறனை மேம்படுத்தவும் வியாபார வருவாயை பெருக்கவும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியுதவியின்கீழ் 10 மீனவர் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.71 லட்சம் செலவில்10 ஊர்திகளையும் முதல்வர் வழங்கினார்.
மீன்பிடி விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு களுக்கு ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், முதல் கட்டமாக ரூ.2 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 1,600 ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகளை வழங்கும் பணியையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது, இயற்கைச் சீற்றங்களால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும்போது, மீனவர்களின் உயிரை காப்பதற்காக ஒவ்வொரு இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடிகலனுக்கும் 2 உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக புதுக் கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு 1,400, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கு 6,374, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு 3,538, திருவாரூர் மாவட்ட மீனவர்களுக்கு 188 என மொத்தம் ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் 11,500 உயிர்காப்பு மிதவைகள் வழங்கும் திட்டம் உட்பட மீன்வளத்துறை சார்பில் மொத்தம் ரூ.4 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் செலவிலான திட்டங்களை முதல்வர் ஜெய லலிதா தொடங்கிவைத்தார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.