திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி பகுதியில் விளைந்துள்ள வெங்காயத்தை அறுவடை செய்யும் பெண் தொழிலாளிகள். 
தமிழகம்

கர்நாடகத்திலிருந்து வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல்லில் வெங்காயம் விலை வீழ்ச்சி

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் அறுவடை தொடங் கிய நிலையில், கர்நாடக மாநி லத்தில் இருந்து வெங்காயம் வரத்து தொடர்வதால் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண் டுக்கல், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காய சாகுபடி நடக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யபட்ட வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டுகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கு மேல் விற்றது. தற் போது வெங்காயம் வரத்து அதி கரிக்கத் தொடங்கியதால் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கிய நிலையில், கர் நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.

தற்போது விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததாலும், ஹோட்டல்களில் குறைந்த அளவே வியாபாரம் நடப்பதாலும் வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறி யதாவது:

விதை வெங்காயத்தை அதிக விலை கொடுத்து வாங்கி நடவு செய்தோம். அதற்கு பூச்சி மருந்து அடிப்பது, உரமிடுவது, களை எடுப்பது எனப் பராமரிப்புச் செலவும் அதிகரித்தது. இந்நிலையில் வெளி மார்க்கெட்டிலேயே வெங்காயம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கும் நிலையில், வியாபாரிகள் அதைவிட குறைந்த விலைக்குத் தான் வாங்குகின்றனர். இத னால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT