தமிழகம்

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி வருவதால், அன்றைய தினம் தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகவளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன.

இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். குடியரசுத் தலைவர் வருகை தருவதால் தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு பணிமுடித்து வீட்டுக்கு திரும்புமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT