கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள திருச்சி தேவர் ஹாலில் இருந்து சிங்கார தோப்பு வரை மேலரண் சாலையில் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்: கூடுதல் மையங்களில் முகாம்களை நடத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் 2 இடங்களில் நேற்று நடைபெற்ற கோவாக்சின் தடுப்பூசி மையங்களில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இதுவரை 6 லட்சத் துக்கும் அதிகமானோருக்கு செலுத் தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத் துக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிகளவு வரப்பெறும் நிலை யில், கோவாக்சின் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வரப்பெறுவ தில்லை. இதனால், ஓரிரு நாட்க ளைத் தவிர, பெரும்பாலான நாட்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாநகரில் 11 இடங்களில் கோவி ஷீல்டு தடுப்பூசி போடும் முகாமும், கலையரங்க மண்டபம் மற்றும் தேவர் ஹால் ஆகிய 2 இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் முகாமும் நேற்று நடைபெற்றன. இந்த 2 இடங்களிலும் தலா 1,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வரப் பெற்றிருந்தன.

இவை தவிர, ஊரகப் பகுதியில் 13 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாமும், 7 இடங்களில் 1,150 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடும் முகாமும் நடைபெற்றன.

இதில், கோவாக்சின் தடுப்பூசி கள் 2-வது தவணையாக இட்டுக் கொள்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

பல நாட்களுக்குப் பிறகு கோவாக்சின் தடுப்பூசி இடும் முகாம் நடைபெற்றதால், மாநகரில் முகாம் நடைபெற்ற 2 இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந் தனர். 2 இடங்களிலும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் இடப் பட்டன.

கலையரங்க மண்டப வளாகத்தில் மக்கள் காத்திருக்க இடவசதி இருந்த நிலையில், தேவர் ஹாலில் போதிய இடவசதி இல்லாததால் மேலரண் சாலையில் சிங்காரத்தோப்பு சந்திப்பு சாலை வரை மக்கள் நீண்டவரிசையில் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வரிசையில் நின்ற மக்கள் அதிருப்தி அடைந் தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியது: ஒரே இடத்தில் மக்கள் குவிந்ததால் கரோனா பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும் என்றுதான் பள்ளிகளில் தடுப்பூசி இடும் முகாம் நடத்தப்பட்டு வந்தது.

அதேபோல, மாநகரில் 2,000 கோவாக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு இடுவதற்கு 4 அல்லது 5 இடங்களில் முகாம் நடத்தி யிருக்கலாம். தேவர் ஹாலில் போதிய இடம் இல்லாததால் சாலையில் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இனி வரும் காலங்களில் முகாம்களை கூடுதல் மையங்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT