தமிழகம்

கூட்டணியில் இருந்து சமக விலகலால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு?

அ.அருள்தாசன்

அதிமுக கூட்டணியிலிருந்து சமக விலகியிருப்பதால், சட்டப்பேர வைத் தேர்தலில் நாடார் சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப் பதில் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்த லில் அதிமுக அணியில் சரத்குமார், திருநெல்வேலி மாவட்டம் தென் காசி தொகுதியிலும், அக்கட்சியில் துணைத் தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த பல ஆண்டு களாகவே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் சமக செயல் பட்டு வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியினர் களமிறங்கியிருந்தனர்.

சமகவில் குழப்பம்

சமீபத்தில், சமக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த கரு நாகராஜன் உள்ளிட்ட சில முக்கிய மாநில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சி விரோத நடவடிக்கைக்காக துணைத் தலைவராக இருந்த தற்போதைய நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டார்.

சரத்குமார் பல்டி

இந்த பின்னணயில் இம்மாதம் 7-ம் தேதி திருநெல்வேலியில் சமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடியது. அப்போதுகூட `அதி முக கூட்டணியில்தான் சமக நீடிக்கிறது’ என்று கூறிய சரத் குமார் நேற்றுமுன்தினம் அதிமுக கூட்டணியில் சமக இல்லை என தெரிவித்தார். இந்த அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சரத்குமாரின் முடிவை கட்சி யினர் வரவேற்பது ஒருபுறம் இருக்க, சமக விலகலால் அதிமுக அணிக்கு, தென்மாவட்டங்களில் அதிக வாக்குவங்கியை கொண்ட நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பின்னடைவு இருக்கும் என்று சமக நிர்வாகிகள் தெரி விக்கின்றனர்.

இதுகுறித்து தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 45 சதவீதம், தூத்துக்குடி மாவட்டத் தில் 60 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 சதவீதம் நாடார் சமுதாயத்தினர் இருக்கிறார்கள். இம்மாவட்டங்களில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி யிலும் சமுதாயம் சார்ந்து இல்லாவிட்டா லும்கூட, சரத்குமாருக்கென்று குறிப்பிட்ட வாக்குவங்கி இருக்கி றது.’ என்றார் அவர்.

நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் ஜி.கரிக்கோல் ராஜ் கூறியதாவது:

சரத்குமார் விலகலால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு தான் ஏற்படும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாடார் சமுதாயத்தினர் பரவியிருக்கிறார் கள். ஆனால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் நாடார் சமு தாயத்துக்கென்று உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வில்லை. நாடார் சமுதாயத்தினர் மத்தியில் இந்த உள்ளக் குமுறல்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. இதை சரத்குமார் வெளியில் வந்து சொல்வார். அது அதிமுகவுக்கு பாதகமாகவே இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT