தமிழகம்

தமிழகம் முழுவதும் 22 லட்சம் வழக்குகள் தேக்கம்: குவியும் வழக்குகளால் விழிபிதுங்கும் நீதித்துறை - நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ஆர்.பாலசரவணக்குமார்

நாளுக்கு நாள் குவியும் வழக்கு களால் நீதித்துறை விழிபிதுங்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 22 லட்சம் வழக்கு கள் தேக்கமடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, காலியாக உள்ள நீதி பதிகள் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என வழக் கறிஞர்களும் நீதித்துறை ஊழியர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 998 நீதிமன்றங்களில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தேக்கமடையும் வழக்குகளின் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நீதித்துறை ஊழியர்கள் கூறியதாவது:

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நில வரப்படி, தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 6 லட் சத்து 60 ஆயிரம் உரிமையியல் வழக்குகளும், 4 லட்சத்து 40 ஆயிரம் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த 11 லட்சம் வழக்குகளும் முக்கிய வழக்குகளாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தை பொறுத்தமட்டில் 2014-ல் நிலுவை யில் இருந்த முக்கிய வழக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 79 ஆயி ரத்து 871. இது, கடந்த ஆண்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் எண்ணிக்கையும் 72 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழக நீதிமன்றங்களில் 14 லட்சம் முக்கிய வழக்குகளோடு, அதைச்சார்ந்த பிற வழக்குகளின் எண்ணிக்கையையும் (8 லட்சம்) சேர்த்தால் மொத்தம் 22 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

கடந்த 2013-ல் இந்த வழக்கு களின் தேக்கம் 18 லட்சமாகவும், 2014-ல் 20 லட்சமாகவும், 2015-ல் 22 லட்சமாகவும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் புதிய வழக்கு கள் தாக்கல் செய்யப்படுவதும், போதுமான நீதிபதிகள் நியமிக்கப் படாததுமே இதற்கு முக்கிய கார ணம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பி.வில்சன் கூறும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போதிய நீதிபதிகள் இல்லை. சென்னையில் இருந்து 4 நீதிபதிகள் வெளிமாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இப்பணி யிடங்களை காலிப்பணியிடங் களாக கருத முடியாது. இதற்கு மாற்றாக வேறு மாநிலங்களில் பணிபுரியும் நீதிபதிகளை தமிழ கத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசும் நீதித்துறையில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை உடனடி யாக நிரப்ப தேவையான உள்கட்ட மைப்பு மற்றும் நிதிஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற முடியும்’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறும்போது, ‘‘நீதிபதிகளின் எண்ணிக்கை வெகுநாட்களாக பற்றாக்குறை யாகவே உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 36 நீதிபதிகளே உள்ளனர். இதி லும் 4 நீதிபதிகள் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப் போகின்றனர். எனவே, விரைவில் நீதிபதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், போதுமான நீதித்துறை ஊழியர்களையும் பணியமர்த்த வேண்டும். நிலுவை வழக்குகளில் விரைவாக தீர்வு காணும் வகையில் வசதி களை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT