அடுக்குமாடி குடியிருப்பில் காரை எடுக்கும்போது தவறாக இயக்கியதால் அருகே இருந் தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரை தளத்தில் 'பாங்க் ஆப் மகாராஷ்டிரா' வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை குடியிருப்பின் வாசல் அருகே சின்ன நீலாங்கரையை சேர்ந்த அப்துல்ரஹீம் (45), குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பியாரிலால் (65), வாசுதேவன், சையது, காவலாளி பிந்தோஷ்கர் ஆகியோர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது வங்கியின் மேலாளர் வெங்கடேஷ்(43) வாசல் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரை ஸ்டார்ட் செய்தார். பின்னர் எதிர்பாராத விதமாக பிரேக் என்று நினைத்து ஆக்ஸிலேட் டரை மிதிக்க, அசுர வேகத் தில் சீறிப்பாய்ந்த கார், வாசல் அருகே நின்று பேசிக் கொண்டி ருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் விரைந்து வந்து 5 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அப்துல்ரஹீம், பியாரி லால் ஆகியோர் நேற்று காலை யில் பரிதாபமாக இறந்தனர். திருவான்மியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் வெங்கடேஷை கைது செய்தனர்.