தமிழகம்

என்.ஆர்.காங்.- பாமக விரைவில் பேச்சு

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநில பாமக செயலாளர் கோபி நேற்று வெளியிட்ட அறிக்கை: திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் அல்லாத மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரியில் போட்டியிட பாமக முடிவு எடுத்துள்ளது. மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு தலைமையும் ஒப்புதல் தந்துள்ளது. அதனால் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் சேர்வது பற்றியும், அதற்கான பேச்சுவார்த்தை உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

SCROLL FOR NEXT