தமிழகம்

80% காங். தொண்டர்கள் தமாகாவில் உள்ளனர் ஜி.கே.வாசன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களில் 80 சதவீதம் பேர் தமாகாவில் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

து: தமிழக மக்களின் மனநிலைக்கேற்பவும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வலுவான கூட்டணியில் தமாகா இடம்பெறும். நாங்கள் காங்கிரஸில் இருந்து வந்தவர்கள்தான். ஆனாலும், காங்கிரஸ் கட்சி யோடு தமாகாவை ஒப்பிட விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களில் 80 சதவீதம் பேர் தமாகாவில் உள்ளனர். இதுவரை 160 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். மக்கள் தமாகாவை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT