மதுரை அருகே இளமனூரில் மரக்கன்று நட்ட அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். 
தமிழகம்

10 ஆண்டுகளாக எதையும் செய்யாத அதிமுகவினர் எங்களை குறை சொல்வதா?- அமைச்சர் பி.மூர்த்தி ஆதங்கம்

செய்திப்பிரிவு

சாலையோரம் மரக்கன்று நடும் வாரத்தையொட்டி மதுரை அருகே இளமனூரில் அமைச்சர் பி.மூர்த்தி மரக் கன்று நட்டு பணியைத்தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: சாலையோரம் ஒரு வாரத் தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 10 ஆண்டுகளாக எதையும் செய்யாத அதிமுக வினர் எங்களை குறை சொல்கின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுரையில் தமிழன்னைக்கு சிலை, சிங்கப்பூராக மாற்றுவோம், மோனோ ரயில் விடுவோம் எனக்கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. நாளை (இன்று) முதல் தொகுதி மக்களிடம் குறை கேட்கிறேன். அப்போது முந்தைய அரசின் செயல்பாடு குறித்து தெரியவரும். அதி முக ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைய முடிந்ததா? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பதிவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.

எனது துறை தொடர்பாக உதயகுமாருடன் விவாதிக்க தயாராக உள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT