தமிழகம்

அரசு ஊழியர்கள் மறியல்: 30 ஆயிரம் பேர் கைது

செய்திப்பிரிவு

20 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். 3-வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேரை போலீஸார் கைது செய்தனர்.

3-வது நாளான நேற்று சென்னை எழும்பூர் அருகே கிரீம்ஸ் சாலை சந்திப்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடைப்பட்டது.

இதேபோல் தமிழகத்தில் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிறகு, மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

          
SCROLL FOR NEXT