பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய செவிலியர்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூறியதாவது:

மதுரை, திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட11 மாவட்டங்களில் கரோனா பணிக்காக கடந்த சில மாதங்களில் சுமார் 5 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் (தொகுப்பூதியம்) நியமிக்கப்பட்டனர். ஆனால், பணியில் சேர்ந்த பின்னரே 6 மாதம் மட்டும்தான் பணி என தெரிவித்தனர். ஆனாலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை தொடர்ந்து செய்து வந்தோம்.

திடீரென்று அனைவரையும் பணியில் இருந்து விடுவித்து விட்டனர். இதுவரை பணி யாற்றியதற்கு ஊதியமும் வழங்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு இங்கு பணியில் சேர்ந்தோம். இப்போது இங்கும் வேலை இல்லை. மீண்டும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்கு போக முடியாத நிலை உள்ளது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. எங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT