புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வேட்பாளர்களின் செல வினங்களைக் கண்காணிக்கத் தவறிய தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடியரசுத்தலைவர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் மனு தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்தல் துறை நிர்ணயித்த 22 லட்சத்தைக் கூட செலவு செய்யாமல் மிக சொற்ப அளவிலான தொகை யையே செலவு செய்துள்ளது போல் தேர்தல் துறை தனது இணையதளத்தில் வெளியிட்ட பட்டியல் செய்தித்தாள்களில் வெளியானது. குறிப்பாக உழவர்கரை, முத்தி யால்பேட்டை, உப் பளம், ஏம்பலம், இந்திரா நகர், கதிர்காமம், நெட்டப்பாக்கம், திருபுவனை, மங்கலம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர், தட்டாஞ் சாவடி, ஊசுடு, ராஜ்பவன் ஆகிய 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களின் செலவுகள் குறைவாக உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையர்கள் கடந்த பிப்ரவரி 11, 12 ஆகிய இரு நாட்கள் புதுச்சேரிக்கு வந்தபோது இவர்களின் வாகனப் பயன்பாட்டிற்கு ரூ.93,720 மற்றும் அவர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கு செய்த செலவு ரூ.6,58,061. இந்தத் தொகையை விட வேட்பாளர்கள் அளித்துள்ள செலவினக் கணக்கு மிக குறைவாக உள்ளது. மேற்கண்ட செலவுகளை செய்துள்ள தேர்தல் துறை அதிகாரிகளுக்கு, ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என கணக்கிடத் தெரியாதா? ஒரு நாளைக்கே பல லட்சம் செலவு செய்துள்ளனர்.
மேலும், வேட்பாளர் பிரசாரத் தின் போது செய்த செலவுகள் அனைத்தும் அரசு ஊழியர்கள், காவலர்கள், மத்திய பறக்கும் படையினரால் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. தேர்தலின் போது, பறக்கும் படையினரால் நாள்தோறும் வேட்பாளர்களின் பல லட்சம் பறிமுதல் செய்ததாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்த நிலையிலும், வேட்பாளர்கள் கொடுத்த தேர்தல் செலவு கணக்குகளை அப்படியே ஏற்றுக்கொண்டது எப்படி?
இதன் மூலம் தேர்தல் துறை பெயரளவில் செயல்பட்டுள்ளதும், புதுச்சேரியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வில்லை என்பதும் தெரிகிறது.
எனவே, சட்டமன்ற வேட் பாளர்கள் சமர்ப் பித்துள்ள தேர்தல்செலவு கணக்கு களை கணக்கிட, அவர்களின் பிரசாரத்தின் போதுதேர்தல்துறை எடுத்த வீடியோவினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வேட்பாளர் செலவினங்களை முறையே கண்காணிக்கத் தவறிய புதுச்சேரி தேர்தல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.