தமிழகம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி தொடங்கியது

செய்திப்பிரிவு

கோயம்பேடு பேருந்து நிலையத் தில், அதிமுக அரசின் சாதனை விளக்க கண்காட்சி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக் கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந் நிலையில், ஆளும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை பல்வேறு வடிவங்களில் தொடங்கி விட்டனர்.

இதற்கிடையில், கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகள் தொடர்பான கண்காட்சி, செய்தித்துறை சார் பில் நடத்தப்படுகிறது. சென்னை மாவட்ட செய்தி தொடர்பு அலு வலகத்தின் மூலம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், ‘தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி’ அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள்

இக்கண்காட்சியை, அமைச் சர்கள் பா.வளர்மதி. எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத் தனர். கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் கடந்த 2011 மே மாதம் முதல் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், எல்இடி வீடியோ வாகனம் மூலம், அரசின் சாதனை விளக்க குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

நிகழ்ச்சியில், சென்னை மேயர் சைதை துரைசாமி, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT