இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. 
தமிழகம்

11 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப 20 மையங்களில் உடல் தகுதி தேர்வு தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், 2-ம்நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்என 10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர்13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

இப்பணிகளுக்காக 5.50 லட்சம் பேர்விண்ணப்பித்தனர். இதில் 4.91 லட்சம்பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த பிப்ரவரி 19-ம்தேதி வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு,உடற்திறன் போட்டி ஆகியவை கடந்தஏப்ரல் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்கள் மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், சான்றிதழ் சரி பார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நேற்று காலை தொடங்கின. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இத்தேர்வு நடைபெற்றது.

இந்த உடல் தகுதி தேர்வு இன்னும்10 நாட்கள் வரை நடக்க உள்ளது.கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் தினமும் 500 பேருக்குஉடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. 2020 செப்டம்பரில் அறிவிப்பு வெளியானபோது, 10,906 காவலர் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. பின்னர் 11,813என மாற்றி அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT