தமிழகம்

அம்மன் சிலையை அப்புறப்படுத்தியதை கண்டித்து மறியல்

செய்திப்பிரிவு

கீழ்க்கட்டளை ஏரியில் அம்மன் சிலையை வைத்து பாக்கியம் நகர், தேன்மொழி நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வந்தனர். ஏரியில் இருந்த சிலையை பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான பணியாளர்கள் அகற்றி பம்மல் கருவூலத்தில் வைத்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை கீழ்க்கட்டளையில் மறியலில் ஈடுபட்டனர். மடிப்பாக்கம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர் .

பல்லாவரம் வட்டாட்சியரை அணுகிபேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT