சு.வெங்கடேசன்: கோப்புப்படம் 
தமிழகம்

பெகாசஸ் விவகாரம்; நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்.பி

செய்திப்பிரிவு

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (ஜூலை 26) தன் முகநூல் பக்கத்தில், "ஒட்டு கேட்‌பது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு எதிரானது.

இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் 5,000 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக செய்தி. இது அதிர்ச்சி அளிக்கிற செய்தி.

இஸ்ரேலிய ஐபிஓ நிறுவனம் தாங்கள் இந்த உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில், வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? அரசை நோக்கியே சுட்டு விரல்கள் நீள்கின்றன.

இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன் மொழிந்துள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT