குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்தும் ‘கலாமை கொண்டாடுவோம்’ என்ற இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நாளை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
எதிர்கால இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க விரும்பியவர் மறைந்த அப்துல்கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும்போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார்.
கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், நாளை மாலை 6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் நிறுவனரும், விஞ்ஞானியுமான பத்மபூஷன் டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் கலந்துரையாட உள்ளனர்.
கலாமுடனான அனுபவப் பகிர்வு
நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் அவர் கள் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை எம்ஜிஆர் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்குகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3wYWlWB என்ற லிங்க்-ல் இணைந்து பங்கேற்கலாம்