மேல்ராவந்தவாடி கிராமத்தில் கூலி தொழிலாளி முருகதாசுக்கு பசுமை வீடு கட்டு வதற்கான ஆணையை வழங்கிய தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ். 
தமிழகம்

செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் 2 கூலி தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்ட அனுமதி: ஆணைகளை வழங்கிய ஆட்சியர் முருகேஷ்

செய்திப்பிரிவு

செங்கம் அருகே 2 கூலித் தொழி லாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுதவற்கான ஆணைகளை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வழங்கினார்.

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் சகோதரர்கள் முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வசிக்கின்றனர். கூலித் தொழிலாளர்களான இருவரும் திருமணமாகி பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளுடன் தனித் தனியே கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந் தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட நிவர் புயலுக்கு, அவர்களது 2 வீடுகளும் சேதமடைந்தன. இதை யடுத்து அவர்கள் அனைவரும், அதே கிராமத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டி டத்தில் வசித்து வந்தனர்.

இவர்கள் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகட்ட அனுமதி வழங்குமாறு மனு அளித்து இருந்தனர்.

இதையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையை முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் தனித்தனியே ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வழங்கினார்.

அப்போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT