தமிழ் இணைய ஒருங்குறி, ஒருங்குறி மாற்றியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்தசெயல்முறை விளக்கப் பயிற்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் இணைய வழியாக தொடங்கிவைத்தார்.
இந்த செயல்முறை விளக்கத்தின்போது, தமிழ் ஒருங்குறி எழுத்துருவான ‘மருதம்’ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, ஒருங்குறி எழுத்துருவை தட்டச்சு செய்ய எந்த விசைப்பலகை உகந்தது மற்றும் முன்னர், வானவில்-அவ்வையார், ஸ்ரீலிபி, பாமினி,டேம், டேப் முதலான குறியீட்டுமுறையில் தட்டச்சு செய்யப்பட்டஆவணங்களை இந்த மென்பொருளைக் கொண்டு எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் இணையதளம் வழியாக 1,400 பேர் பங்கேற்றனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யுடியூப் வழியாகப் பார்த்தனர். மேலும், இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் முனைவர் அ.ஜேம்சை9710039249, 044 22209400 என்றதொலைபேசி எண்ணிலோ அல்லது ‘cdntacd.tva@tn.gov.in, tva@tn.gov.in’ என்ற மின்னஞ்சல்கள் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் இணையகல்விக் கழகத்தின் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இணையதளம் வழியாக 1,400 பேர்பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யுடியூப் வழியாக பார்த்தனர்.