தமிழகம்

உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு: பேரவையில் நிறைவேறியது சட்டத் திருத்தம்தான் - அமைச்சர் வேலுமணி விளக்கம்

செய்திப்பிரிவு

உள்ளாட்சிப் பதவிகளில் பெண் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்குவது என்பது விதி 110-வது கீழ் வெளியிட்ட அறிவிப்பு அல்ல. சட்டப்பேரவையில் ஏகமன தாக நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை 110-வது விதி அறிவிப் பால் நிறைவேற்ற முடியாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது, விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு அல்ல. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திருத்த சட்ட முன்வடிவாகும். இந்த சட்ட முன் வடிவு, கடந்த 20-ம் தேதி என் னால் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடக்கவும், அதில் பங் கேற்று பதவியில் அமரவும் இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எனவே, அமல்படுத்த முடியாமல் போகுமோ என்ற அச்சம் தேவையில்லை. வெகு விரைவில் சட்ட முன்வடிவு சட்டமாக்கப்படும். இச்சட்டப்படி இந்த ஆண்டு அக்டோபரில் நடக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்று வெற்றி பெறுவர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT