தமிழகம்

ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் சுரேஷ்ரோஹின் வழங்கிய ரூ.1.20 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் தங்கர்பச்சான்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் சுரேஷ்ரோஹின் ஏற்பாட்டில், ரூ.1.20 கோடிமதிப்பிலான 14 போர்ட்டபிள் வென்டிலேட்டர் கருவிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இவற்றை, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸடாலினிடம், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சான் ஒப்படைத்தார்.

அப்போது, சமீபத்தில் கடலூர்மருத்துவமனையில் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பை கனடா நண்பருடன் பகிர்ந்து கொண்டதால், அவர் இக்கருவிகளை வாங்கி அனுப்பிவைத்ததாக தங்கர்பச்சான் தெரிவித்தார். சந்திப்பின்போது, நடிகர் நாகிநீடு உடனிருந்தார்.

SCROLL FOR NEXT