தமிழகத்தில் சமீப காலமாக தேச விரோத, இந்து விரோத செயல்கள் அதிகரித்துள்ளன என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித் தும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனைவாசலில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந் தது. மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் தனசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசிய தாவது: தமிழகத்தில் சமீபகாலமாக இந்து விரோத, தேச விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தாங்கள் போட்ட பிச்சையில்தான் திமுக ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகிறார். அதை கேட்டு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனமாக உள்ளார். இதில் இருந்து என்ன தெரிகிறது?
அறநிலையத் துறை கோயில் சொத்துகளை இந்து அல்லாத வர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது. வடபழநி கோயிலுக்கு சொந்தமான சொத்தை மசூதிக்கு விற்றுள்ளனர். அதை அமைச்சர் சேகர்பாபு மீட்க வேண்டும். பொது சிவில் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.