தமிழகம்

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு அபராதத்தை உயர்த்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக் கான அபராத கட்டணத்தை உயர்த்தி அமல்படுத்தும் நடவடிக்கைகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன், பாதாள சாக்கடைகள் இணைப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட கழிவுநீர் இணைப்புக்காக விதிக்கப்படும் அபராதத் தொகை திருத்தி அமைக் கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை அமல்படுத்துவதற்கு சட்டசபையின் நிர்வாக அனுமதி பெற வேண்டியுள்ளதால் காலதாமத மாகும் என்று அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தர விட்டிருந்தனர்.

கடந்த மாதம் இவ்வழக்கு விசார ணைக்கு வந்தபோது, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட் டது. அதில், அபராத தொகையை அதிகரிப்பது குறித்த சட்ட வரைவு மசோதா ஒன்றை தயாரித்து வருவதாகவும், அதன் இறுதி வடிவம் வந்ததும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னி லையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செய லாளர் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில் அபராதத் தொகை உயர்வு தொடர்பான சட்டத் திருத்தம் குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அதை அமல்படுத்த சட்டசபை மற்றும் நிர்வாக ஒப்புத லுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அபராதத்தை உயர்த்தும் ஒரு சாதாரண நடவடிக்கைக்கு இவ்வளவு கால அவகாசம் ஏன் தேவை என்பது எங்களுக்குப் புரியவில்லை. மிக விரைவாக இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தேர்தல் சமயத்தில் அது கடினம் என்பதால் அபராத உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கைகளை ஜூன் மாதத்துக் குள் முடிக்க வேண்டும்” என்று உத்தர விட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT