தமிழகம்

வாக்குப் பதிவு இயந்திரங்களை மத்திய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்: திமுக கோரிக்கை

செய்திப்பிரிவு

வாக்குப் பதிவு இயந்திரங்களை மத்திய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மாவட்டங்களில் ஆய்வு, அதி காரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் என சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சி யர்களின் கட்டுப்பாட்டில் அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சேலம் போன்ற மாவட்டங் களில் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை நடைபெற்றுள்ளது, தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக அரசின் கீழ் இயங்கும் மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங் களை ஒப்படைப்பது சரியானது அல்ல.

மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் துறை அதிகாரி களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை பல அதிகாரிகள், ‘அம்மாவின் ஆணைக்கிணங்க..’ எனக் கூறி அரசு விதிகளை மீறி வருகிறார்கள்.

எனவே, தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு தமிழக அரசு அதி காரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை வாக்குப் பதிவு இயந்திரங்களை மத்திய அரசு அலுவலகங் களில், மத்திய காவல் துறையினரின் பாதுகாப்பில் வைக்க வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரங் களை பரிசோதிக்க வேண்டு மானால் மத்திய அரசு அதிகாரி மற்றும் மத்திய காவல் துறையினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் பரிசோதிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT