மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். படம்: க.பரத் 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று காலை தொடங்கியது.நாளை வரை 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலை திமுகவுடன் இணைந்தே சந்திப்போம்’’ என்றார்.

3 தீர்மானங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஜூலை 31-ம் வரை வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்கக் கூடாது,

பெகாசஸ் மென்பொருள் மூலம்நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கணினி, செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதற்கு மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம். சோஷலிச நாடான கியூபா மீது 60 ஆண்டுகளாக நீடிக்கும் அமெரிக்காவின் பொருளாதார தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். கியூபாவுக்குஇந்திய அரசு அரசியல் ரீதியாகஆதரவு அளிப்பதோடு, அந்த நாட்டுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT