அதிமுகவில் இருந்து மகளிர், வர்த்தக அணிகளின் நிர்வாகிகள் சமீபத்தில் திமுகவுக்குச் சென்றனர். இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்துஇன்று முதல் விடுவிக்கப்படுகின்றனர். அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், சார்புஅமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதன்படி, மகளிர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, இணைச் செயலாளராக மரகதம் குமரவேல் எம்எல்ஏ,இலக்கிய அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், வர்த்தக அணி செயலாளராக முன்னாள் எம்எல்ஏவான விஎன்பி வெங்கட்ராமன், இணைச் செயலாளராக தூத்துக்குடி தெற்குமாவட்டத்தை சேர்ந்த ஏ.எம்.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.