தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் (2014 - 2019) முன்னாள் உறுப்பினர் கு.பரசுராமன். இவர், தற்போது அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர்.
இந்நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, சிலரிடம்பணம் வாங்கி கொண்டு வேலைவாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாக பரசுராமன் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு கு.பரசுராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்அளித்தார். அப்போது, “நான் வேலை வாங்கித் தருவதாக கூறி, யாரிடமும் பணம் பெறவில்லை. என் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ஆட்சி தத்துவத்தின்படி, அண்ணாவின் வழிகாட்டுதல்படி, அவரின் கொள்கைகளை பின்பற்றிமிக சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்த நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்சிறப்பான ஆட்சியைத் தருகிறார். இதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சிஅடைகின்றனர். நானும் மகிழ்ச்சிஅடைகிறேன்’’ என்றார்.
முதல்வர் குறித்த அதிமுக முன்னாள் எம்பியின் கருத்து, அதிமுககட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.