வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ‘ரிவேரா-16’ சர்வதேச கலை மற்றும் கலாச்சார விழா இன்று தொடங்கி, 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் செய் தியாளர்களிடம் நேற்று கூறும் போது, ‘‘விஐடி பல்கலைக்க ழகத்தில் இந்த ஆண்டுக்கான ‘ரிவேரா-16’ என்ற சர்வதேசக் கலை மற்றும் கலாச்சார விழா இன்று (4-ம் தேதி) தொடங்கி 4 நாட்கள் நடைபெறும். இதில், மொத்தம் 102 போட்டிகள் நடத்தப் படுகின்றன. விஐடி பல்கலைக்க ழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கான மாணவ, மாணவி கள் பங்கேற்க உள்ளனர். முதல் முறையாக இந்த ஆண்டு தடகள போட்டியும் இடம்பெறுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியாக மாரத்தான் போட்டி நாளை (இன்று) நடக்கிறது. விஐடி பல்கலை. வளாகத்தில் தொடங்கும் மராத் தான் போட்டியை கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். இதில் 7,500 மாணவ- மாணவிகள் பங்கேற்கின்றனர். விஐடி பல்கலை.யில் தொடங்கி சித்தூர் பேருந்து நிலையம், ஓடை பிள்ளையார் கோயில், காலேஜ் ரவுண்டானா, தனபாக்கியம் மண்டபம், சில்மில்க் வழியாக மீண்டும் பல்கலைக்கழக வளா கத்தில் முடிவடையும்.
மாலை 6.30 மணியளவில் மாபெரும் இசைக் கச்சேரி நடக் கிறது. இதில் பாலிவுட் பாடகி சுனித் சவான் பங்கேற்கிறார். 2-ம் நாள் நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி இசைக் கச்சேரி நடக்கிறது. இதில் பின்னணி பாடகர் கார்த்திக் பங்கேற்று பாடுகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக ‘லேசர் ஷோ’ நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியில், ‘பரிக்கரமா’ என்ற இசை நிகழ்ச்சியும், ‘பிரிக்ஸ் பாக்டர்’ என்ற வாத்திய கருவி களுடனான இசை மற்றும் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.
இறுதி நாளான பிப்ரவரி 7-ம் தேதி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பரிசுகள் வழங்க உள்ளார். 102 போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றபெற்ற மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்படும் என்றார். இதையடுத்து ‘ரிவேரா-16’ லோகோமற்றும் போஸ்டரை விஐடி துணைத் தலைவர்கள் சேகர்விசுவநாதன், ஜி.வி.செல்வம் வெளியிட, மாணவர் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விஐடி இணை துணைவேந்தர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.