தமிழகம்

குஷ்பு ‘ட்விட்டர்’ கணக்கு முடக்கம்: சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் அண்மையில் முடக்கினர். குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்த அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டன.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபுவிடம் குஷ்பு புகார் அளித்தார். மேலும், தனது ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக குஷ்பு அறிக்கை வெளியிட்டார். அதில் ‘எனது ட்விட்டர் கணக்கு 3 நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். கடந்த சில நாட்களாக எனது ட்விட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல’ என்று தெரிவித்திருந்தார்.

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் என விளக்கம் கேட்டு ட்விட்டர் நிறுவனத்துக்கு சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் எழுதி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT