தமிழகம்

சென்னை உட்பட 9 நகரங்களில் மின்சார பேருந்து இயக்க முடிவு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு 40 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள 9 நகரங்களில் மின்சார பேருந்துகளை (எலக்ட்ரிக் பஸ்) இயக்க எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி மும்பை, புனே, டெல்லி, பெங்களூரூ, அகமதாபாத், சூரத், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 9 நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஒரு மின்சார பேருந்தை தயாரிக்க ரூ.1 கோடி வரை செலவாகிறது. எனவே, தமிழக அரசுடன் இணைந்து இப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளோம். மின்சார பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ.க்கு மேல் செல்லும். பெட்ரோல், டீசலை விட செலவு 30 முதல் 40 சதவீதம் குறையும். அரசு அனுமதி வழங்கும் வழித்தடத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதொடர்பாக விரைவில், தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளோம். அப்போது, டிக்கெட் கட்டணம், வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT