முன்னாள் நீதிபதி செல்வம் 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே கோயில் நிலத்தை மீட்க போராடும் முன்னாள் நீதிபதி

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீஉருமன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோயிலைச் சுற்றிலும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. உரிய அனுமதி பெறாமல் இந்த நிலத்தில் ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை அமைத்துள்ளனர்.

இதை பொதுப்பாதை யாக பலர் பயன்படுத்தி வருகின் றனர். இதேநிலை நீடித்தால் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படும் நிலை உள்ளது. இந்த சாலையை அகற்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் போராடி வருகிறார்.

இதுகுறித்து செல்வம் கூறியதாவது: ஸ்ரீஉருமன் கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. கோயில் நிலத்துக்குள் அனுமதியின்றி 225 அடிக்கு சாலை அமைத்துள்ளனர். இச்சாலை இருப்பதால் கோயில் நிலம் பொதுப்பாதையாக மாறி விட்டது. இந்த சாலையை அகற்ற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT