தமிழகம்

சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாந கராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்துபோன வாக்காளர்கள், பலமுறை பதிவு செய்யப்பட்ட, மறுபடியும் இடம்பெற்ற வாக்காளர் கள் ஆகியோரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி செம்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெறும் இப்பணி தொடர் பான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணை யர் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல அலுவலர்களுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்கள் கள ஆய்வை முடிக்க உள்ளனர். பின்னர் நீக்கப்பட உள்ள வாக்காளர்களின் பெயர் பட்டியல் 20-ம் தேதி வெளி யிடப்படும். இறுதி நீக்கல் பட்டியல் மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in ல் வெளியிடப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT