ஸ்வாதி மோகன் 
தமிழகம்

அமெரிக்க தூதரகம் சார்பில் ஜூலை 28-ம் தேதி நாசா பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு: பல்வேறு துறை சாதனையாளர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

அமெரிக்கா தூதரகம் சார்பில் நாசா பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் கலந்துரையாடல் நிகழ்வுஜூலை 28-ம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது.

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் ‘புலம் பெயர்ந்தசாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் இணையவழியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி தற்போதுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் கல்வி, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த புலம் பெயர்ந்த இந்தியர்கள் பங்கேற்று தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சித் தொடர்,ஜூலை 28-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா பொறியாளர் ஸ்வாதி மோகன் பங்கேற்று கலந்துரையாடுகிறார். இவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் ரோவர் வாகனத்தை வெற்றிகரமாக தரை இறக்கிய திட்டப்பணிகளில் ஸ்வாதி மோகன் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் இந்தியாவுடனான குடும்ப உறவு, செவ்வாய் கிரக திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்த தனது கருத்துகளை ஸ்வாதி மோகன் பகிர்ந்து கொள்வார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://statedept.zoomgov.com/webinar/register/WN_Zh6CxJU7QyugRH3gJ9FlEg என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னைஅமெரிக்க துணைத் தூதரகத்தின் முகநூல் பகுதியிலும்

(https://www.facebook.com/chennai.usconsulate/) இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதுகுறித்து சென்னை அமெரிக்க துணைத் தூதர்ஜூடித்ரேவின் கூறும்போது, ‘‘சுமார்40 லட்சத்துக்கும் அதிகமானஅமெரிக்கர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் குரல் பொதுமக்களைச் சென்றடைவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

மேலும், இந்த முயற்சி 2 நாடுகளுக்கு இடையேயான உறவுகள்வலுப்பெற உதவும். தொடர்ந்துமேலும் பல்வேறு சாதனையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT