கொந்தகை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, இறுதிச் சடங்குக்கு பயன்படுத்தப்பட்ட பானை. 
தமிழகம்

கொந்தகை அகழாய்வில் பானை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் அருகருகே முதுமக்கள் தாழி, இறுதிச்சடங்குக்கு பயன்படுத்திய பானை கண்டெடுக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை மண் பானை, காதில் அணியும்தங்க வளையல், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம் படிகம், எடைக்கற்கள், அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம், உறைகிணறுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அகரம் அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடைந்த நிலையில் ஒரு உறைகிணறும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொந்தகையில் அருகருகே முதுமக்கள்தாழி, இறுதிச் சடங்குக்கு பயன்படுத்தப்பட்ட பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT