தமிழகம்

மகாமக பிரசாதத்தை பெற 8 ஆயிரம் பேர் முன்பதிவு: அஞ்சல்துறை தகவல்

செய்திப்பிரிவு

மகாமக பிரசாதத்தை பெறுவதற்கு சுமார் 8 ஆயிரம் பேர் அஞ்சல் நிலையங்கள் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அஞ்சல் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கும்பகோணம் மகாமக பிரசாதத்தை பக்தர்கள் வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ளும் வண்னம் இந்திய அஞ்சல்துறையுடன் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, மகாமக பிரசாதத்துக்காக 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் ஆன்லைன் முன்பதிவுகள் தமிழக அஞ்சலகங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்தின் மூலமும் ரூ.150 செலுத்தி மகாமக பிரசாதத்தை பெற பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி சென்னை நகர மண்டலத்தில் உள்ள 1,626 கிளை அஞ்சல் நிலையங்களிலும் உள்ளது. மகாமக பிரசாதம் கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையத்தில் முறையாக பேக்கிங் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பேக்கிங் ஒவ்வொன்றிலும், மகாமகக் குளத்தின் தீர்த்தம் மற்றும் கும்பகோணத்தில் உள்ள 17 கோவில்களின் பிரசாதங்களும் இடம் பெற்றிருக்கும்.

          
SCROLL FOR NEXT