நாகர்கோவிலில் ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நலக் கூட்டணியின் அணுகுமுறை, ஆம் ஆத்மி கட்சியின் ஊழலற்ற ஆட்சி தருவோம் என்ற அணுகுமுறையை போன்றே உள்ளது. தேர்தலுக்கு பின்னரும், ஊழல் கட்சிகளுடன் சேர மாட்டோம் என மக்கள் நலக் கூட்டணி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினால், கட்சித் தலைமையிடம் கலந்து பேசி தகுந்த முடிவு எடுக்கப்படும்” என்றார்.