புகழூரில் உள்ள டிஎன்பிஎல் நிறுவன நிலக்கரி அரைக்கும் பிரிவில் மேற் பார்வையாளர் கண்காணிப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். நிலக்கரி அரைக்கும்போது, திடீரென தீ மளமளவென பரவியதில் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சவுந்தர்(26) தீயில் கருகி அங்கேயே பலியானார்.
ஒப்பந்தத் தொழிலா ளர்கள் சுப்பிரமணி, தேவராஜ் ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர். இரு வரும் கரூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, சவுந்தர் உடல் மீட்கப்பட்டது. பின்னர், தீ முற்றிலும் அணைக் கப்பட்டது. தீ விபத்து தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.