கோப்புப்படம் 
தமிழகம்

ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ரேஷன் ஊழியர்களை இடம் மாற்ற உத்தரவு

செய்திப்பிரிவு

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே நியாயவிலைக் கடையில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று ஆண்டுகளுக்கு மேல்ஒரே நியாயவிலைக் கடையில் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பணியாற்றுபவர்களை அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் பணியாற்றக் கூடாது. அவ்வாறு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது கைதுஉள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநபர்களை அனுமதித்து, அவர்களுக்கு துணைபோன பணியாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT